ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
யதார்த்தத்தையும் தாண்டி வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடிப்பவர் விஜய்சேதுபதி. தற்போது இவர், அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக்கும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆறுமுக குமார் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, 8 விதமான வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.
"தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்தே ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை எடுத்துள்ளோம். 8 வித்தியாசமான தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். இயக்குனராக மட்டுமின்றி விஜய் சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பேன் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக சுவாரசியமானது, சவாலானதும் கூட... கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது" என்கிறார் இப்பட இயக்குநர் ஆறுமுக குமார்.