ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2007ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'லட்சுமி கல்யாணம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த 'பழனி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதே சமயம் இயக்குனர் பாரதிராஜா தான் அவரைக் கண்டுபிடித்து 'பொம்மலாட்டம்' படம் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார் என்றும் சொல்வார்கள்.
தமிழில் தொடர்ந்து “மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம்” ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக ஒரு படத்திலும், அஜித் ஜோடியாக 'விவேகம்' படத்திலும் நடித்து வருகிறார்.
ராஜமௌலி இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'மகதீரா' படம் பெரிய வெற்றி பெற்றதால் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். பல முன்னணி கதாநாயகர்களுடன் அங்கு நடித்து விட்டார். தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் 'நேநே ராஜா நேநே மந்திரி' படம் அவருடைய 50வது படமாம்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் கதாநாயகியாக நடித்துள்ள காஜல் அகர்வால் 10 வருடங்களில் 50 படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் படம் வெளிவந்த பிறகு தமிழிலும் அவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.