ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகி சுமார் 1700 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் படம் 'பாகுபலி 2'. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது. படம் வெளியான அனைத்து நாடுகளிலுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது.
இப்படம் அடுத்த கட்ட வெளியீட்டிற்குத் தற்போது தயாராகி வருகிறது. முதல் கட்டங்களில் வெளியாகாத நாடுகளில் இப்போது படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதன்படி வரும் 30ம் தேதி தைவான் நாட்டில் இப்படம் வெளியாக உள்ளது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் சீனா மற்றும் தைவான் நாட்டில் வெளியிடப்பட்ட போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அந்தக் குறையை 'பாகுபலி 2' போக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'பாகுபலி 2' படம் தைவான் நாட்டில் வெளியான பிறகு அடுத்து சீன நாட்டில் அதிகமாக விளம்பரப்படுத்தி வெளியிட உள்ளதாகச் செய்திகள் வெளியாக உள்ளது. அங்கு வசூலில் சாதனை புரிந்தால்தான், 'தங்கல்' படத்தின் வசூல் சாதனையை 'பாகுபலி 2' படத்தால் முறியடிக்க முடியும்.