ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள் ஏராளமானபேர். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள்... சமீபகாலமாக, சின்னத்திரையிலிருந்து நடிகர்கள் மட்டுமல்ல இயக்குநர்களின் வரவும் அதிகரித்து கொண்டே போகிறது. அந்தவகையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பணிபுரிந்த ராஜ்குமார், கவுதம் கார்த்திக் நடித்துள்ள "ரங்கூன்" படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இவர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர். "ரங்கூன்" படம் இன்று(ஜூன் 9-ம் தேதி) திரைக்கு வந்துள்ளது, படத்திற்கு பாராட்டும் கிடைத்திருக்கிறது. இவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் பல நிகழ்ச்சி தயாரிப்புகளில் இருந்த இன்பசேகரன், தம்பி ராமைய்யா மகன் நடித்துள்ள "அதாகப்பட்டது மகா ஜனங்களே" படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். தொடர்ந்து இவர்களைப்போன்று ஏராளமான படைப்பாளிகள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.