செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மங்காத்தா படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வியடைந்து வருகின்றன. அதனால் அவரை வைத்து படம் எடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டனர்.
எனவே வேறு வழியில்லாமல் 'பிளாக் டிக்கெட்' என்ற பட நிறுவனம் தொடங்கி அதன் சார்பில் 'சென்னை-600028 - இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தயாரித்து இயக்கினார் வெங்கட் பிரபு. அந்தப்படமும் காலை வாரிவிட்டதால் அப்ஸெட்டானார்.
மீண்டும் தயாரித்து இயக்கினால் பெரிய ஹீரோவை வைத்துத்தான் படம் பண்ண வேண்டும் என்ற முடிவில் உள்ள வெங்கட்பிரபு, தற்போது சின்னபட்ஜெட்டில் 'ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரிக்கிறார். வெங்கட் பிரபுவின் உதவியாளரும், 'வடகறி' படத்தை இயக்கிய வருமான சரவணராஜன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
'ஒரு நாயகன் உருவாகிறான்'என்ற டேக் லைனோடு படத்தின் டைட்டிலை அறிவித்தார் வெங்கட் பிரபு. இந்த படம் அரசியல் பின்னணியில் எடுக்கப்படவிருக்கும் படம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது அமைதிப்படையில் சத்யராஜ் நடித்த அமாவாசை கேரக்டர் போல் அடிமட்டத்திலிருந்து அமைச்சராக உயரும் அரசியல் கட்சியின் தொண்டன் பற்றிய கதையாம்.
இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் டீமை சேர்ந்த வைபவ், சனா, சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மக்களுக்கு ஆறுதலான செய்தி... இந்தப் படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லையாம்.