ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று(ஜூன் 2-ம் தேதி) 73வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு காலை முதலே வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன. இந்நிலையில் இளையராஜா பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இளையராஜாவுடன் போட்டோ எடுக்க காலைமுதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பலர் குடும்பமாக போட்டோ எடுத்து கொண்டனர். ஏராளமான ரசிகர்கள் மாலைகள், பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் சங்கம் சார்பில் எஸ்.ஏ.ராஜ்குமார், தீனா உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு ஆள் உயர மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நண்பகலுக்கு மேல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. மாலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.