மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
கமலின் உன்னைப்போல் ஒருவன், அஜித்தின் பில்லா-2 படங்களை இயக்கியவர் சக்ரி டோலட்டி. இவரது இயக்கத்தில் நயன்தாரா தற்போது நடித்துவரும் படம் கொலையுதிர் காலம்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம்.
ஹாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராபி பயூம்கார்ட்னர் (Robby Baumgartner) இப்படத்தில் பணியாற்றுகிறார். கொலையுதிர்காலம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹிந்தியிலும் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படத்தை தமிழில் இயக்கும் சக்ரி டோலெட்டியே இயக்குகிறார். தேவி படத்திற்கு பிறகு மீண்டும் பிரபு தேவா, தமன்னா இப்படத்தில் நாயகன், நாயகியாக இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இந்தியாவிலே முதல் முறையாக 8K கேமரா தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு காமோஷி என்று பெயரிட்டுள்ளனர். இதே தலைப்பில் 1996 ஆம் ஆண்டு சல்மான்கான், நானா படேகர், மனீஷா கொய்ராலா நடிப்பில் ஒரு படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.