Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்களில் ஒருவர் கருணாநிதி : கமல் புகழாரம்

28 மே, 2017 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Kamal-greets-Karunanidhi-for-his-94th-birthday

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அவரத வைரவிழாவும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் கருணாநிதி. அவர் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான கதாசிரியர். கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்காக எம்.ஜி.ஆரும் என்னை பாராட்டினார்.


எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன். கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். கருணாநிதி உடனான எனது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளி பாராட்டினார். கருணாநிதி கிள்ளி பாராட்டிய கன்னம் என் கன்னம். கருணாநிதியின் வசனத்தை சிவாஜி கணேசன் குரலில் நடித்து காட்டுவது எனக்கு ஒரு பரிட்சை.


வைரவிழா கொண்டாடுது என்றால் எத்தனை இளமையில் அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். எத்தனை முதுமைகளை தாங்கிப் பிடித்திருக்க வேண்டும். வாழ்த்துவதற்கு வயதில்லை என்பார்கள். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. நல்ல மனது இருந்தால் போதும். அது சிறு வயது முதலே எனக்கு உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.


இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (46) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (46)

P. SIV GOWRI - Chennai,இந்தியா
29 மே, 2017 - 09:57 Report Abuse
P. SIV GOWRI வர வர பக்கா அரசியல்வாதியாகி கொண்டு உள்ளார்
Rate this:
Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29 மே, 2017 - 08:31 Report Abuse
Bhaskaran Ramasamy எப்படி பாவாடை நாடாவை கழட்டுவது என்பதிலிருந்தா ?
Rate this:
SANKAR - calgary,கனடா
29 மே, 2017 - 06:37 Report Abuse
SANKAR கலைஞர் ஒரு சாதாரண தொழிலாளி மகன் ..பிற்பட்ட வகுப்பில் பிறந்தார் ..ஆனால் உழைப்பால் முன்னுக்கு வந்தார்.. படித்தது மெட்ரிக் கூட இல்லை என்றாலும் கடின உழைப்பால் சினிமா தயாரிப்பாளர் ஆனார்..பல புத்தகங்கள் படித்தும் கடின உழைப்பாலும் ஏகலைவன் போல (கமலும் அப்படித்தான்) அறிவை வளர்த்து தமிழ் புலமை பெற்றார்.. பல நூல்கள் படைத்தார்... கட்சியிலும் மக்களுக்கும் உழைத்ததால் தொடர்ந்து பதின்மூன்று முறை சட்டசபை உறுப்பினராக.. அதுவும் சென்ற முறை தமிழ் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று உலக சாதனை படைத்தார்... அதுமட்டுமா தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக அவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த பெருமை அவர் ஒருவருக்கே.... அவர் நலிந்தோரும் உயர்ந்து சமத்துவ சமுதாயம் ஏற்பட பிற்படுத்த பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு உழைத்தார்.. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக நலிந்தோர் வாழ்வில் முன்னேற, குடிசை மாற்று வாரியம், பிற்பட்டோருக்கு 69% இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைகளுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்களை நடைமுறை படுத்தினார்... மத நல்லிணக்கத்தை பேணினார்.. தமிழ்மறையாம் திருக்குறளை எங்கும் முழங்கவும் அவருக்கு வள்ளுவர் கோட்டமும் வானுயர சிலையும் எடுத்து தமிழின் பண்பாட்டையும் பெருமையையும் உலகோரும் உற்றோரும் அறியும் வகை செய்து தமிழ் பண்பாடு வளர செய்தார்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக தமிழ் மாநாடுகள் நடத்தி உலக தமிழர்களை பெருமை படுத்தினார்...தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் வந்தும் தன் தேச கடமையை ஆற்றியவர்..அதனால் நாட்டில் தொழில் வளமும் கட்டமைப்பும் வளர்ந்தது,, கடன் கட்டுக்குள் இருந்தது .. அவர் செய்த நற்பணிகளை மறைக்கவும் அவருக்கு கெட்ட பேர் ஏற்படுத்த எண்ணியும் மனசாட்சி இல்லாமல் சில குறுமதியோர் நஞ்சை கக்கினாலும்.. திருவாரூரார் புகழ் மங்காது... மங்காது.. மங்காது.. அவர் செய்த நல்ல பணிகளை எண்ணி அவரை கவுரவிக்க அவரது கட்சியினரும் தோழர்களும் விரும்புகிறார்கள்... கட்சியில் இல்லாத நடு நிலையாரும் (கமல் போல) அவர் செய்த நல்ல காரியங்களுக்காக பாராட்டும் நன்றியும் தெரிவிக்க விரும்பும் போது... உங்களுக்கு மனம் இருந்தால் வாழ்த்துங்கள் .. இல்லையேல் (இங்கு கருத்து தெரிவித்துள்ள பன்னாடை ,கடப்பாரை போன்றவர்களுக்கு) உங்கள் பொறாமை பொச்செரிப்பை வெளிப்படுத்தி உங்கள் சின்ன புத்தியை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம்... அன்புடன் சங்கர்
Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
29 மே, 2017 - 05:58 Report Abuse
Panneerselvam Chinnasamy nalainthu perukku vayitrerichchal ... ennapannuvathu avarkal oru sombu thanni kudikkattum...
Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
29 மே, 2017 - 05:34 Report Abuse
Panneerselvam Chinnasamy கற்றோரை கற்றோரே காமுறுவர்...
Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in