ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'கபாலி' படத்திற்கப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 28ம் தேதி சென்னையில் ஆரம்பமாக உள்ளது. மும்பை பின்னணியில் உருவாக உள்ள இந்தப் படத்திற்காக சென்னையில், மும்பை தாராவி பகுதியை அப்படியே உருவாக்கியுள்ளார்கள்.
படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல செய்திகள் வெளிவந்தன. ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, வித்யா பாலன் என ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயின்கள் பெயர்கள் செய்திகளில் இடம் பிடித்தன. கடைசியாக அந்த வாய்ப்பு ஹுமா குரேஷி-க்குக் கிடைத்துள்ளது.
டில்லியில் பிறந்து வளர்ந்து கல்லூரியில் படித்து வந்த ஹுமா, பின்னர் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு மாடலிங்கில் ஈடுபட்டு சில பிரபல கம்பெனிகளின் விளம்பரங்களில் நடித்தார். அவற்றைப் பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப் அவரை, 'காங்ஸ் ஆப் வாசிப்பூர்' படத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து சில ஹிந்திப் படங்களில் நடித்த ஹுமா, மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஒய்ட்' படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஹுமா குரேஷிதான் ரஜினிகாந்தின் ஜோடியா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும்.