ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தற்போது பிரபு தேவா நடித்து வரும் படம் எங் மங் சங். கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரபு தேவா, குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். கும்பகோணத்திலிருந்து சீன தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படும் பிரபுதேவா, அங்கு படித்து பெரிய குங்பூ மாஸ்டர் ஆகிறார். அதன்பிறகு தனது ஒரிஜினல் பெற்றோர்களை தேடி கும்பகோணம் வரும் அவர், இங்கு அவர்கள் ஒரு பிரச்சினையில் இருப்பதை அறிகிறார். அதனை தீர்த்து வைத்து மாமன் மகள் லட்சுமி மேனனையும் காதலிப்பது மாதிரியான கதை என்கிறார்கள்.
இதில் பிரபு தேவா தந்தையாக தங்கர் பச்சான் நடிக்கிறார். இவர்கள் தவிர சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்ஜே.பாலாஜி, மாரிமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.எஸ்.அர்ஜுன் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுநீள காமெடி படம். அம்ரீஷ் இசை அமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.