ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாகுபலி 2' என்ற ஹிந்தி டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வசூல் மழை பெய்து கொண்டிருக்கிறதே என அடுத்த மாதம் வரப்போகும் வழக்கமான மழையை விட இந்த வசூல் மழையை பாலிவுட் திரையிலகத்தினர் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர். 15 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி தற்போது 450 கோடியை இப்படத்தின் ஹிந்தி டப்பிங் வசூல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 50 கோடியைத் தொட்டால் 500 கோடியைத் தாண்டிவிடும். அது வரும் வாரங்களில் நடந்து விடும் என்று இப்போதே சொல்கிறார்கள்.
படத்தை வினியோகம் செய்ய வாங்கியவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபம் அதிகமாகவே கொட்டிக் கொண்டிருக்கிறதாம். வட இந்திய மாநிலங்களின் மூலை முடுக்குகளில் கூட 'பாகுபலி' என்றால் நன்றாகவே தெரிய வந்துவிட்டது. இதுவரை தென்னிந்தியப் படங்கள் வெளியிடப்படாத பல ஊர்களில் கூட இப்படம் வசூலை அள்ளியிருப்பதுதான் மிகவும் ஆச்சரியம் என்கிறார்கள்.
'பாகுபலி 2' படத்தின் ஹிந்தி டப்பிங் வசூலைத் தாண்டும் அளவிற்கு அடுத்து யார் படம் கொடுக்கப் போவது என்பதில் ஹிந்தித் திரையுலகமே திகைத்துப் போயிருக்கிறதாம். வரும் காலங்களில், டப்பிங் படங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.