ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அஜித்தின் விவேகம் டீசர் வெளியாகி ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களின் டீசர் சாதனைகளை முறியடித்து இந்தி படங்களுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், யு டியூப்பில் வெளியான இந்த டீசரை திருநெல்வேலி ரசிகர்கள் தியேட்டர் திரையில் பார்க்க ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
அதையடுத்து மே 11-ந்தேதி இரவு 12.01 மணிக்கு வெளியான விவேகம் டீசர் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது அங்கு கூடிய ஏராளமான அஜித் ரசிகர்கள் திரையில் அஜித்தைப் பார்த்து ஆரவாரம் செய்ததோடு தியேட்டர் ஸ்கிரீனில் பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இதனால் திரை சேதமடைந்து விட்டது. இதை அந்த தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.