ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் பிரபாஸின் திரையுலக வாழ்க்கையில் பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என்று தான் சொல்ல வேண்டும். பாகுபலிக்கு முன்பு வரை டோலிவுட்டில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பேசப்படும் நடிகராகிவிட்டார். அவரை வைத்து படம் இயக்க டோலிவுட் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பலரும் முயற்சித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல அவரை விளம்பர படத்திலும் நடிக்க கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கார் விளம்பரம், பிஸ்கட் விளம்பரங்களில் நடித்துள்ள பிரபாஸை தேடி, சமீபத்தில் அழகு சாதன பொருட்கள் தொடர்புடைய நிறுவனம் ஒன்று அவரை விளம்பர படத்தில் நடிக்க கேட்டு அணுகியது. இதற்காக அவருக்கு ரூ.18 கோடி வரை சம்பளம் தர முன் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரபாஸ் அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை.
சமீபத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீரை தேடி, இதேப்போன்று விளம்பரம் வந்தது, அதற்கு அவருக்கு ரூ.9 கோடி வரை தயாராக அந்த நிறுவனம் இருந்தது. ஆனால் அதை ரன்பீர் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.