ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான், நீது சந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். சிம்பு முதன்முறையாக நான்கு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் அஸ்வின் தாத்தா, மைக்கேல் என்ற இரண்டு கேரக்டர்கள் மட்டும் முதல் பாகத்தில் இடம்பெறுகிறதாம்.
மேலும், நான்கு கதாபாத்திரங்களுக்கான மொத்த கதையையும் படமாக்கியபோது படத்திற்குரிய நீளம் அதிகம் வந்துவிட்டதாம். விளைவு, டிரிபிள் ஏ படத்தை இரண்டு பாகங்களாக்கி விடலாம் என்று கதையில் சிறிது மாற்றம் செய்து இப்போது அந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்து விட்டனர். இந்நிலையில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் முதல் பாகத்தை ரம்ஜான் தினத்தில் வெளியிடும் நிலையில், இரண்டாவது பாகத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.