ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமன்னா கிளாமர் ஹீரோயின் என்கிற வட்டத்திற்குள் சிக்கியிருந்தபோதும், மாறுபட்ட கேரக்டர்களிலும் நடித்துள்ளார். முக்கியமாக பாகுபலியில் அவர் நடித்துள்ள புரட்சிகரமான அவந்திகா கேரக்டர் அவரை பேச வைத்த வேடமாக அமைந்தது. இந்த நிலையில், தற்போது விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் தமன்னா, இந்த படத்தில் ஒரு ஆச்சாரமான பிராமண் பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
சாதாரணமாக வடசென்னை கதைக்களம் என்றால், அந்த படத்தில் நடித்திருப்பவர்களை கருப்பு கலர், எண்ணெய் தேய்க்காத பரட்டை தலை என்று மாற்றி விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் சில காட்சிகளில் அப்படி தோன்றும் விக்ரம், பின்னர் தனது லுக்கை மாற்றிக்கொள்கிறாராம். அதேபோல், பிராமண் பெண்ணாக நடிக்கும் தமன்னா, சில காட்சிகளில் மடிசார் சேலை அணிந்தும் ஹை லுக்கில் தோன்றுகிறாராம். அது தமன்னாவுக்கு புதிய அவுட்லுக்கை கொடுத்திருக்கிறதாம். அதோடு, இந்த தாதா கதையில் தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.