ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் விஜயகாந்த், தனது மகன் நடிக்கும் மதுரை வீரன் படத்தின் படப்பிடிப்பு முன்னின்று துவக்கி வைத்தார். நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் முதல்படமே தோல்வியை தழுவியது. அதனால் அடுத்தடுத்து நல்ல கதைக்களுக்காக காத்திருந்தவர், இப்போது ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இயக்கும் மதுரை வீரன் படத்தில் நடிக்கிறார்.
இதில் சமுத்திரகனி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழா இன்று நடந்தது. மகனின் படத்தை பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து வைக்க, விஜயகாந்த் துவக்கி வைத்தார். உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த், தற்போது தனது மகன் விழாவில் பங்கேற்றார். சென்னையில் தொடர்ந்து 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து மற்ற ஊர்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியாக ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
மதுரை வீரன் பட துவக்கவிழாவில் சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்கே.சுதீஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.