ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
தமன்னா என்றாலே கவர்ச்சி நாயகி என்கிற கண்ணோட்டத்திலேயே எல்லா டைரக்டர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தநிலையில், பாகுபலியை இயக்கிய ராஜமவுலி மட்டும்தான் அவரை ஒரு புரட்சி பெண்ணாக நடிக்க வைத்தார். அதனால் தமன்னாவின் சினிமா கேரியரில் அந்த படத்தில் நடித்துள்ள அவந்திகா கேரக்டர் மறக்க முடியாததாகி விட்டது.
அந்தவகையில், முதல் பாகத்தைப்போலவே பாகுபலி-2விலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறி வரும் தமன்னா, சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்த எனது கனவை நனவாக்கிய ராஜமவுலி, புரட்சிகரமான வேடத்தில் நடிக்க வைத்து எனது இமேஜையே மாற்றி விட்டார். அதனால் பாகுபலியில் நடித்தது சினிமாவில் பெரிய அளவில் சாதித்து விட்ட மனதிருப்தியை கொடுத்துள்ளது. அதனால் என்னையும் மாற்று கோணத்தில் சிந்தித்த ராஜமவுலிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. முக்கியமாக எனது சினிமா கேரியரில் ராஜமவுலி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்று பூரிப்போடு கூறி வருகிறார் தமன்னா.