மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி என பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். அவர் தற்போது இயக்குனராக மாறி இயக்கி உள்ள படம் மாயவன். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த படத்திற்கு ஹீரோயினான லாவண்யாவை நடிக்க சந்தீப் கிஷன்தான் சிபாரிசு செய்ததாக வந்த செய்தி பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சந்தீப் கிஷன் "படத்தில் ஒரு சைக்காட்டிஸ்ட் கேரக்டர்தான் ஹீரோயின், அதற்கு பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் தான் லாண்யாவை பாருங்கள் என்று கூறினேன். லாவண்யாவுக்கும் எனக்கும் ஒரே மாஜேனர்தான். இதை சிபாரிசு என்று கூற முடியாது" என்றார்.
இதுகுறித்து லாவண்யா திரிபாதி கூறும்போது "கதையின் கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்ததால் என்னை தேர்வு செய்தார்கள். தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் நடிக்க நேரம் இல்லை. இனி தமிழில் கவனம் செலுத்துவேன்" என்றார்.