Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மாயவன் போட்டி
Egypt Contest
Share this page:

எகிப்துக்கு போறீகளா...?

" உலக அற்புதங்கள் நிரம்பிய எகிப்து நாட்டிற்கு இலவசமாக செல்வதற்கு, தினமலர் இணையதள
வாசகர்களுக்கு
ஒரு வாய்ப்பு
கிடைத்துள்ளது. "

"அட்டகத்தி, பீட்சா,  சூதுகவ்வும், முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை" போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் சிவி குமார், மாயவன் படம் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார். மேலும் இந்த எகிப்து சுற்றுலா போட்டியை தினமலர் மூலம் இணைந்து நடத்துகிறார்.

நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிமையான விஷயம் தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள,' மாயவன் ' படத்தின் போஸ்டரை உற்றுக் கவனியுங்கள். அதில் 11 பேரின் உருவம் இடம் பெற்றுள்ளது. இதில் யார் மாயவனாக இருக்கும் என நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

அதோடு, மாயவன் படத்தின் டிரைலரை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் ஷேர் செய்து, அதன் ஸ்கிரீன் ஷாட்டையும், கேள்விக்கான பதிலையும் egypttour@dinamalar.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடை எழுதியவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு இலவசமாக 3 நாள் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.   

போட்டிக்கான கடைசி நாள்

டிசம்பர் 18, 2017 (இந்திய நேரப்படி மாலை 4 மணி) வரை

Share the Trailer on your Facebook / Twitter
https://youtu.be/pSSF1-nZVMI

போட்டிக்கான விதிமுறைகள்...

  • 1. பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • 2. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
  • 3. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை தேர்ந்தெடுக்க முடியாது.
  • 4. படத்தில் குறிப்பிட்டுள்ள 11 கேரக்டரில் மாயவன் யார் என்று சரியான விடையளிக்கும் இருவர் தேர்வு செய்யப்படுவர். அதோடு மாயவன் பட டிரைலரை உங்களது பேஸ் புக் அல்லது டுவிட்டரில் ஷேர் செய்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும்.
  • 5. இருவருக்கு மேல் சரியான விடை எழுதி இருந்தால், நடுவர் குழு முன்னிலையில் இருவர் தேர்வு செய்யப்படுவர், நடுவர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
  • 6. சிபாரிசு, பரிந்துரை, தனிப்பட்ட மற்றும் மறைமுக தகவல்களுக்கு அனுமதி இல்லை. போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விபரம் தினமலர் இணையதளம் மூலமே அறிவிக்கப்படும்.
  • 7. உங்கள் சரியான விடையை egypttour@dinamalar.in என்ற இ-மெயில் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, இமெயில் மற்றும் தொலைபேசி எண்ணுடன் அனுப்பவும்.
  • 8. இந்த போட்டியில் தினமலர் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்க இயலாது.
  • 9. இது பொழுதுபோக்கு அம்சமான போட்டி மட்டுமே.
நன்றி
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in