விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து இரும்புத்திரை, அநீதி கதைகள், விஜய் -61 மற்றும் தமிழ்-தெலுங்கில் உருவாகும் மகாநதி என பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. மேலும், அஞ்சான் உள்ளிட்ட சில படங்களில் கவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அவர், இப்போது கவர்ச்சி காட்சிகளுக்கு கட்டிங் போடுகிறார். மாறாக, பர்பாமென்ஸ் உள்ள கதாபாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்.
குறிப்பாக, இதற்கு முன்பு காமெடி காட்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத சமந்தா, தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இரும்புத்திரை படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடி காட்சிகளில் அவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். சமந்தா-ரோபோ சங்கர் தோன்றும் காமெடி காட்சிகளுக்கு தியேட்டர்களில் பெரிய கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள். அதோடு, ஸ்பாட்டில் தனது காமெடி நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து, இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கும் ஓரளவு முன்னுரிமை கொடுக்கப்போவதாக சொல்கிறார் சமந்தா.