மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி ஓரளவு நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் '8 தோட்டாக்கள்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்துபுதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அந்தப் படத்தை உடனடியாக இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல்.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் இந்த படம் சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இவற்றில் செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகி உள்ளது. அப்படத்தின் வெளியீட்டுக்கு முன் ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இயக்குநர் ஸ்ரீ கணேஷுக்கு 26 வயதுதான் என்பது கூடுதல் தகவல்.