இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
மும்பையை சேர்ந்தவர் நடிகை சனாகான். சிம்பு நடித்த ‛சிலம்பாட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி... போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதன்காரணமாக மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றார். தற்போது அங்கு சில படங்களில் நடித்து வருபவர், தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரியாகியுள்ளார். அதுவும் தான் அறிமுகமான சிம்பு படத்திலேயே ரீ-என்ட்ரியாகிறார்.
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் இப்போது சனாகானும் இணைந்துள்ளார். விரைவில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.