ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ளது கச்சிராயநத்தம் என்ற கிராமம். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் விருதகிரி. இவர் தனது பதவி காலத்தில் கிராமத்துக்கு பல நல்ல காரியங்களைச் செய்து உள்ளூர் ஹீரோவானார். சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பரிசும் வாங்கியுள்ளர். உள்ளூர் ஹீரோ இப்போது சினிமா ஹீரோவாகியிருக்கிறார்.
லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் பி.செந்தில்குமரன் தயாரிக்கும் விருத்தாசலம் என்ற படத்தில் விருதகிரி ஹீரோவாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஸ்வேதா, சமீரா, ஷெரின் தாஹா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சம்பத்ராம், பாவா லட்சுமணன், காதல் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவநேசன், உமா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர், ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். படம் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி வெளிவருகிறது.
"சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக பதினான்கு வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறார். வெளியே வரும் அவர் இளமையை இழந்து பெற்ற தாயையும் இழந்து காதலியையும் இழக்க நேரிடுகிறது. ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. அவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது என்றார் இயக்குனர் ரத்தன்கணபதி.