ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இது பேய் பட டிரண்ட் அதற்கு உதயநிதியும் விதிவிலக்கல்ல. அவர் நடித்து முடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படமும் ஒரு பேய் படம்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி தற்போது காமெடி டிராக்கில் போய் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபகாலமாக காமெடி படங்கள் கொடுத்து வெற்றி பெற்று கொண்டிருக்கும் எழிலிடம் கதை கேட்டார் உதயநிதி. எழில் இரண்டு கதைகள் சொன்னார். இரண்டுமே நன்றாக இருந்ததால் இரண்டையும் சேர்த்து ஒரே கதையாக பண்ண முடியுமா என்றார். சரவணன் இருக்க பயமேன் உருவானது.
இது காமெடி கலாட்டா படம் தான் என்றாலும் ஆவி, பேய் சமாச்சாரங்களையும் இணைத்திருக்கிறார் எழில். ரெஜினா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சிருஷ்டி டாங்கே சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சூரி ரெஜினினாவின் தாய்மாமனாக நடித்திருக்கிறார். அவர் ஒரு அரசியல் கட்சியை திடீரென தொடங்கி அதை நடத்த முடியாமல் படுகிற அவஸ்தைகள் புஷ்பா புருஷன் ரேன்ஞ்சுக்கு காமெடியாக வந்துள்ளதாம். இவர்கள் தவிர யோகிபாபு, ரோபோ சங்கர், ரவிமரியா, மன்சூரலிகான், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின் என ஒரு காமெடி பட்டாளமே இருக்கிறது. இமான் இசை அமைத்துள்ளார். கொஞ்சம் பயமுறுத்தி நிறைய சிரிக்க வைக்கிற படமாக சரவணன் இருக்க பயமேன் உருவாகி உள்ளது.