ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சசிகுமார் நடிக்கும் புதிய படம் கொடி வீரன். பலே வெள்ளையத்தேவா தோல்விக்கு பிறகு சசிகுமார் நடிக்கும் படம். குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை கிராமத்து பின்னணியில் இயக்கிய முத்தையா இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியா பூர்ணா நடிப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தது. பின்னர் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹன்சிகா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை பூர்ணா மறுக்கிறார்.
இன்னும் ஒரு சில நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் நான் கலந்து கொண்டு நடிக்க இருக்கிறேன். படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போது எனது பெயரும் வரும்" என்கிறார். பூர்ணா. படத்தில் ஒரு வில்லி கேரக்டர் இருப்பதாகவும் அதில்தான் பூர்ணா நடிக்கிறார் என்றும் பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.