ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அஜித்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. தானும் ஒரு ஹீரோவாக இருந்தபோதும், அஜித் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது முதல்நாள் முதல் காட்சி பார்த்து ரசிக்கும் ரசிகராகத்தான் இப்போதுவரை இருக்கிறார் சிம்பு. அதேசமயம், தான் நடித்த வாலு படம் ரிலீசாக முடியாமல் பல தடைகளை சந்தித்து வந்தபோது, அந்த படம் வெளியாக உதவிக்கரம் நீட்டினார் விஜய். அதையடுத்து விஜய்-சிம்புவுக்கிடையே நெருக்கம் அதிகமானது. விஜய் எனது அண்ணன் என்று கூறிவந்தார் சிம்பு. அதையடுத்து, அஜித் ரசிகர்கள் சிம்புவுக்கு எதிராக இணையதளங்களில் கோஷங்கள் எழுப்பியதை அடுத்து, விஜய் எனது அண்ணன் என்றபோதும், நான் அஜித்தின் ரசிகன்தான் என்று சொல்லி அந்த சலசலப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் சிம்பு.
இந்தநிலையில், தனக்காக மட்டுமின்றி மற்ற ஹீரோக்களுக்காகவும் பின்னணி பாடுவதை தொடர்ந்து வரும் சிம்பு, சந்தானம் நடித்து வரும் ஓடி ஓடி உழைக்கனும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அந்த படமே இன்னும் வெளிவராத நிலையில், துப்பாக்கி, கத்தி படங்களுக்குப்பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவியுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், விஜய், சிம்பு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.