ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சசிகுமார் நடித்த வெற்றிவேல், கிடாரி படங்களில் நடித்தவர் நிகிலா விமல். கேரளத்து நடிகையான இவர், அதற்கு முன்பே மா.கா.பா.ஆனந்துடன் பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.அந்த படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கும் நிகிலா, கிளாமருக்கு முழு தடை விதித்து நடித்து வருவதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.
இதுகுறித்து நிகிலாவை தொடர்புகொண்டு கேட்டபோது, என்னைப்பொறுத்த வரை கதைகளை ஒருபோதும் நான் கிளாமர், ஹோம்லி என்று தரம் பிரிப்பதில்லை. அதோடு, இதுவரை என்னிடம் கிளாமராக நடிக்க வேண்டும் என்று எந்த இயக்குனரும் கேட்டதுமில்லை. என்னைத்தேடி வந்ததெல்லாமே ஹோம்லியான வேடங்கள்தான். மேலும், எனக்கும் கிளாமர் கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைதான். கிளாமர் என்று வரும்போது முகம் சுழிக்காத கிளாமரை வெளிப் படுத்தி நடிப்பேன் என்கிறார் நிகிலா விமல்.