ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்ததால், க்ளிக் ஆகாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தார் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படம் கமர்ஷியலாக ஓடியதால் சிபிராஜுக்கு மவுசு ஏற்பட்டது. அதையடுத்து அவர் நடித்த ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா ஆகிய இரண்டு படங்களும் ஓடவில்லை. இந்நிலையில், சிபி சத்யராஜ் நடித்த 'கட்டப்பாவை காணோம்' படம் நாளை ரிலீசாகிறது.
இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ண்மூர்த்தி இயக்கும் 'சத்யா' படத்தில் நடித்து வருகிறார் சிபி சத்யராஜ்! இந்த படங்கள் தவிர மேலும் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சிபி சத்யராஜ்! அதில் ஒன்று தான் இயக்குனர் வி.இச்ட்.துரையிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும், விளம்பர பட இயக்குனருமான வினோத் இயக்கும் புதிய படம்.
இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். இதற்கு அடுத்து அறிமுக இயக்குனர் அன்பு இயக்கும் படத்தில் கதாநாயகியாக 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா நடிப்பதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை, அப்படியா? எனக்கே இது புதிய தகவல் என நக்கலாக மறுத்துள்ளார் சிபி.