ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு அந்த படத்தில் டூ-பீஸ் உடை யணிந்து நடித்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்தார் எமி. அதையடுத்து, தங்கமகன், கெத்து, தெறி படங்களில் நடித்தவர் மீண்டும் ஷங்கரின் 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் உச்ச நடிகையாகி விட்டார் எமி.
ஆனபோதும், அவருக்கு அடுத்தபடியாக புதிய படங்கள் கமிட்டாகவில்லை. காரணம், ஒரு படத்திற்கு எமிஜாக்சனை புக் பண்ணினால், அந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள் பலதடவை சென்னையில் இருந்து லண்டனுக்கு பறந்துவிடுவாராம். அப்படி ஒவ்வொரு முறை அவர் செல்வதற்கும் புருடியூசர்தான் செலவு செய்ய வேண்டுமாம். அதோடு, சில சமயங்களில் லண்டனில் இருந்து கொண்டு ஏதாவது காரணத்தை எஸ்எம்எஸில் அனுப்பி விட்டு, படப்பிடிப்புக்கு டேக்கா கொடுத்து விடுவாராம். இதனால் எமியை வைத்து ஒரு படம் பண்ணி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம். அதனால், பணத்தை தண்ணீராக செலவு செய்பவர்களுக்குத்தான் எமி செட்டாகும். சாதாரண மீடியம் பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்களுக்கு அவர் செட்டாக மாட்டார் என்கிறார்கள்.