ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு மலையாளப்பட வாய்ப்பு தேடி வரும் போலிருக்கிறது. நெப்போலியன் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்ப்பட வாய்ப்புகள் குறைந்துபோனது. எனவே மலையாளத்தில் நடிக்கப்போனார். யாத்ரா மொழி உட்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதேபோல் சரத்குமார் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது, பழசிராஜா உட்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். இந்த வரிசையில் இப்போது விஷால்.
'லிங்கா' படத்தை எடுத்த 'ராக்லைன்' வெங்கடேஷ் மலையாளத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும், இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் விஷாலும் நடிக்கிறார். விஷால் நடிக்கும் முதல் மலையாள படமான இந்தப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாளத்தில் ஏற்கெனவே மோகன்லாலை வைத்து சில வெற்றிப் படங்களை இயக்கிய பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. மோகன்லாலும், விஷாலும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்தப்படத்திற்கு 'வில்லன்' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.