ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் சமீபத்தில் வெளிவந்தது. பரதன் இயக்கி இருந்தார். விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்திருந்தார். இந்த படத்தின் தலைப்பு தமிழ்தான் என்றும் தமிழ் கலச்சாரத்தை தாங்கிபிடிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது என்றும் அறிவித்து தமிழக அரசு பைரவா படத்திற்கு வரிவிலக்கு வழங்கியது.
ஆனால் புதுச்சேரி மாநில அரசு பைரவா என்பது தமிழ் சொல் அல்ல, படத்தின் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று வரிச்சலுகை அளிக்க மறுத்துவிட்டது. இதனால் படத்தின் புதுச்சேரி விநியோக உரிமை பெற்றிருந்த ஜி.ஆர்.துரைராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்.
"பைரவா என்பது இறைவன் சிவனை குறிக்கும் சொல். தமிழ்நாடு அரசு வரிச்சலுகை வழங்கியிருக்கும்போது புதுச்சேரி அரசு வழங்காமல் இருப்பது தன்னிச்¬யான முடிவாகும். எனவே புதுச்சேரி அரசு பிறப்பித்த வரிவிலக்கு ரத்து உத்தரவை திரும்பபெற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.