மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மா.கா.பா.ஆனந்த்-நிகிலா விமல் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். எஸ்.பி.மோகன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு இடத்தில் முதலிரவு காட்சி வந்தபோது, இந்த இடத்தில் ஒரு முதலிரவு பாடல் வைக்கலாம் என்று சொன்ன இமான், மை ஒய்ப்பு ரொம்ப பியூட்டிபுல் -என்ற அந்த பாடலை சூப்பர் ஹிட்டாகவும் கொடுத்துள்ளார்.
அதுபற்றி இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறும்போது, இந்த படத்தின் கதையில் முதலிரவு காட்சி வருகிறது. முதலில் நான் இந்த சூழலில் பாடல் எதுவும் யோசிக்கவில்லை. ஆனால் இசையமைப்பாளர் டி.இமானிடம் கதையை சொன்னபோது அவர்தான் இந்த இடத்தில் ஒரு முதலிரவு பாடல் வைக்கலாம் என்று சொன்னார். அதையடுத்து அதற்கான டியூன் உருவாக்கப்பட்டு, மை ஒய்ப்பு ரொம்ப பியூட்டிபுல் என்று பாடலை எழுதினார் யுகபாரதி. அதையடுத்து சிவசங்கர் மாஸ் டர் அந்த பாடலை சென்சார் கத்தரிக்கு வேலை கொடுக்காமல், பியூர் வெஜிடேரியனாக படமாக்கிக்கொடுத்தார்.
அதோடு, மா.கா.பா.ஆனந்த்-நிகிலா விமல் இருவருமே மிக இயல்பாக அந்த பாடலில் நடித்துள்ளனர். கணவன்கள் அனைவருமே இந்த பாடலை தங்களது மனைவியைப்பார்த்து பாடும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலை எளிமையாகவும், இனிமையாகவும் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் டி.இமான் என்கிறார் இயக்குனர் எஸ்.பி.மோகன்.