ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
1980-90களில் முக்கிய காமெடியனாக நடித்து வந்தவர் சார்லி. புதுவசந்தம், பூவே உனக்காக படங்கள் வந்தபோதெல்லாம் முன்னணி காமெடியனாக இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் புதிய காமெடியன்கள் மார்க்கெட்டுக்கு வந்த பிறகு சரிவை சந்தித்தார் சார்லி. அதனால் சில ஆண்டுகள் சரியானபடி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக குணசித்ர நடிகராக நடித்து வருகிறார். அந்தவகையில், பாபநாசம், கிருமி, ஆறாது சினம்,ஒருநாள் கூத்து, எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களில் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து மறுபடியும் பிசியாகி வருகிறார்.
அதோடு, காமெடியனான தன்னால் சீரியசான வேடங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து வரும் சார்லி, அடுத்தபடியாக செண்டிமென்ட் நடிகராகவும் தற்போது உருவெடுத்து வருகிறார். அந்தவகையில், பாம்பு சட்டை படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பாவாக நடித்துள்ளார். குறிப்பாக, யதார்த்தமாக பேசும் ஒரு நியாயமான அப்பாவாக நடித்திருக்கிறார். அந்தவகையில், இதுவரை சார்லி நடித்துள்ள செண்டிமென்ட் கேரக்டர்களில் இது அவருக்கு பெருமை சேர்க்கும் அப்பா வேடமாக இருக்கும் என்கிறார்கள்.