ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சத்யராஜின் உறவுக்காரர் சத்யன். பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மாதம்பட்டி சிவகுமாரின் மகன். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி அதில் வெற்றி பெற முடியாமல் காமெடி நடிகர் ஆனவர். 2013ம் ஆண்டு வரை பிசியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு அதன் பிறகு சிறிய பிரேக் விழுந்தது. ஒரு வருடம் படமே இல்லை. அதற்கு அடுத்த வருடம் புலியில் மட்டும் நடித்தார். சென்ற வருடம் 24, வாகா படங்களில் மட்டும் நடித்தார்.
தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய்யின் 61வது படத்திலும் நடிக்கிறார். இதனை அட்லி இயக்குகிறார். விஜய்யுடன் நடித்த நண்பன் படமும், துப்பாக்கி படமும் சத்யனுக்கு பெரிய ரீச் கொடுத்தது. தற்போது மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார். இதன் பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் சத்யன்.