ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா உலகம் என்பது குதிரை ரேஸ் மாதிரி. எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், சினிமாவில் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருப்ப வர்கள்கூட எதிர்பாராமல் வீழ்ச்சி ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள சைடு பிஸ்னஸ் நடத்துவார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் நடிகர்களில் ஜீவா, ஆர்யா ஆகியோர் சென்னையில் ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சினிமாவில் நடித்து வந்தபோதும் அவர்களது குடும்பத்தினர் அந்த ரெஸ்டாரெண்டை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கும் சென்னையில் பெரிய அளவில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால் தனது நட்பு வட்டாரங்களில் யாரே னும் ஹோட்டல் நடத்தி வந்தால் அவர்களிடம் அந்த தொழில் பற்றிய விசயங் களை கேட்டறிகிறார். அதோடு, தனக்கு ஹோட்டல் நடத்துவது பற்றிய போதிய அனுபவம் இல்லாததால் ஹோட்டல் நடத்தும் நெருங்கிய நண்பர்கள் மூலம் விரைவில் ஒரு ரெஸ்டாரெண்ட் திறக்கப்போகிறாராம் விஜய் ஆண்டனி.