ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க பொதுக்குழு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் பி.ஷோபி பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஒய்.சிவா, துணை தலைவர்கள் ஆர்.சுரேஷ், பி.வி.நோபல், வி.தினேஷ்குமார், கே.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சங்கத்தின் புதிய பெயர் பலகையும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கடந்த பொதுக்குழுவில் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர் சங்கம் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதை முறைப்படி தொழிலாளர் நல வாரியத்திடம் தெரிவித்து மாற்றப்பட்டுள்ளது. சங்கத்திற்கு இது பொன்விழா ஆண்டு. இதனை கொண்டாடும் வகையிலும், சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையிலும் இந்த ஆண்டு பிரமாண்ட நட்சத்திர கலை விழா ஒன்றை நடத்துவது. அனைத்து உறுப்பினர்களுக்கும் இலசவ மருத்து காப்பீடு வழங்குவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.