ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தர்மதுரை டைட்டிலில் விஜய்சேதுபதி நடித்தார். தனது டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள ரஜினியும் அனுமதி கொடுத்தார். புதிய தர்மதுரையில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்தனர். யுவன் இசை அமைத்திருந்தார். ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். சீனு ராமசாமி இயக்கி இருந்தார். படத்தின் 100 வது நாள் விழாவை சமீபத்தில் நடத்தி அனைவருக்கு ஷீல்டு கொடுத்தனர்.
தலைப்பை கொடுத்த ஒரிஜினில் தர்மதுரையை அவரது அலுவலத்தில் சந்தித்து 100வது நாள் ஷீல்டை கொடுத்தனர். விஜய்சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டு தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணறை மணி நேரம் நீடித்தது. படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் . விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார். சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமுக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.