Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவின் ‛கடம்பன்' ஷூட்டிங் முடிந்தது - வெற்றி கிட்டுமா...?

02 டிச, 2016 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Aryas-Kadamban-Shooting-over

கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பை நிறுத்திவிட்டு படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழிலை மட்டும் செய்து வந்தார் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஆர்.பி.சௌத்ரி. கடைசியாக விஜய் நடித்த ஜில்லா படத்தை தயாரித்தவர் தற்போது 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'கடம்பன்' படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக காடுகளிலும், மலைப்பகுதிகளிலம் கடம்பன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த புதன் கிழமை அன்று படப்பிடிப்பு முடிவடைந்து பூசணிக்காய் உடைத்தனர். இறுதிநாள் படப்பிடிப்பில் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.


ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். இப்படத்திற்காக ஆர்யா கடுமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுமஸ்தான உடம்புடன், மலை கிராமத்து இளைஞனாக வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். 'குண்டே' என்ற ஹிந்தி படத்தில் நடித்த தீப்ராஜ் ராணா வில்லனாக நடித்துள்ளார். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த படமாக உருவாகியுள்ள கடம்பன் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்த ஆர்யாவுக்கு இந்த கடம்பன் படம் வெற்றியடைந்தால் மட்டுமே அவரது வண்டி ஓடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in