ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் பைரவா. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சிஜா ரோஜ், மகேஷ்பாபு, டேனியேல் பாலாஜி, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத் துள்ளார். விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. மேலும், முதன்முறையாக விஜய் திருநெல்வேலி தமிழ் பேசி நடித்துள்ள இந்த படத்தில் சென்னை பின்னி மில்லில் செட் போட்டு திருநெல்வேலி சம்பந்தப் பட்ட பல காட்சிகளை படமாக்கியபோதும், இறுதிகட்ட படப்பிடிப்பை நெல்லையில் நடத்தினர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பைரவா படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் இறுதியாக பேசவிருக்கும் நிலையில், மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகள் நடக்கிறது. அதோடு, ஏற்கனவே நெல்லையில் படப்பிடிப்பு நடத்தியபோதும், அது போதுமானதாக இல்லாததாக நினைத்த பரதன், பேட்ஜ் ஒர்க்கிற்காக இன்னும் ஒரு பத்து நாள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பு நடத்துகிறாரம். அப்போது ஹீரோ- ஹீரோயினி தவிர வில்லன், காமெடியன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக உள்ளதாம்.