மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தீபாவளிக்கு வெளியான கொடி வசூலில் வெற்றிக்கொடியாக பறப்பதை எண்ணி செம உற்சாகமாக இருக்கிறார் தனுஷ். அவரது நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக முடங்கிக் கிடந்த தொடரி, கொடி ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்ததில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. அடுத்து வட சென்னையில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் இடையில் ராஜ்கிரணை ஹீரோவாகப் போட்டு 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.
சினிமா ஸ்டண்ட் நடிகர் பற்றிய இப்படத்தில் ராஜ்கிரணுடன் தனுஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். 'காதலும் கடந்து போகும்', இப்போது தயாரிப்பில் இருந்து வரும் 'கவண்' ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தவர் இவர். எனவே மடோனா செபாஸ்டியன் பற்றி விஜய்சேதுபதியிடம் ஒப்பீனியன் கேட்டு அதன் பிறகே, 'பவர் பாண்டி' படத்தில் அவரை கதாநாயகியாக புக் பண்ணினாராம் தனுஷ்.
இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக தனுஷுடன் ஜோடி சேருகிறார் மடோனா செபாஸ்டின். இவர்களுடன் பிரசன்னா, சாயா சிங் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத்தை கழற்றிவிட்ட பிறகு ஷான் ரோல்டனை தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளராக்கிக் கொண்ட தனுஷ், 'பவர் பாண்டி'க்கும் அவரையே இசை அமைக்க வைத்திருக்கிறார்.