டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! | வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி |
இப்போது எந்த படம் வெளிவந்தாலும் அந்த படத்தின் கதை என்னுடயது திருடிவிட்டார்கள் என்று பலர் புகார் கூறுகிறார்கள். சில கதை திருட்டுகள் சில லட்சம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்படுகிறது. சில திருட்டு கதைகள் நீதிமன்றம் வரை செல்கிறது. இப்படி ஒரு புகார் சிவாஜி நடித்த தெய்வப்பிறவி படத்துக்கும் வந்தது. அதை தீர்த்து வைத்த விதம்தான் புதிது.
1960ம்ஆண்டு வெளியான படம் தெய்வப்பிறவி. நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி நடித்திருந்தார்கள். கதை, திரைக்கதை வசனத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார்கள். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
இந்த படத்தின் கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு தொகைக்கு ஏவிஎம் நிறுவனத்திற்கு கொடுத்தார். அப்போது இந்த கதை நான் எழுதியது. அதனை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திருடி விட்டார் என்று ஒருவர் ஏவிஎம் நிறுவனத்தில் புகார் கொடுத்தார். இதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் அவர் கோர்ட்டுக்கு போவார் ஒருவேளை ஒரே கதையாக இருந்தால் நிறுவனத்தின் இமேஜும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இமேஜும் பாதிக்கப்படும். இதற்காக இயக்குனர் கிருஷணன்-பஞ்சு ஒரு புதுமையான தீர்ப்பைச் சொன்னார்.
தெய்வப் பிறவியின் கதைக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனையும், புகார் அளித்தவரையும் வசனம் எழுதச் சொன்னார். இருவரும் வசனம் எழுதிக் கொடுத்தார்கள். அதை படித்து பார்த்துவிட்டு இது கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எழுதிய கதைதான். என்று தீர்ப்பளித்தார். சொந்த கதை என்பதால் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் வசனம் உயிர்துடிப்போடு இருந்தது,, புகார் அளித்தவரின் வசனம் சொதப்பலாக இருந்தது. அதை அவரிடமே விளக்கி கூறி புகார் செய்தவரை கண்டித்து அனுப்பி வைத்தார்.