ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் சங்க மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நடிகர் சங்கத்தில் ஊழல் நடப்பதாக எழுந்த விவகாரம் தொடர்பாக பொதுச் செயலாளர் விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விஷால், இதுவரை எவ்வளவு பணம் செயவிட்டுள்ளோம் என ஒவ்வொரு ரூபாய்க்குமான கணக்கு நடிகர் சங்கத்தில் உள்ளது. வரவு - செலவு கணக்கு குறித்த விபரம் நடிகர் சங்கத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம். இணையதளத்திலும் அதனை நாளை (அக்.,24) வெளியிட உள்ளோம்.
ஆடிட்டர் அளித்த ரிப்போர்ட்டை நடிகர் சங்க பொதுக் குழுவில் வெளியிட உள்ளோம். நடிகர் சங்க பொதுக் குழு அக்டோபர் 27ம் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்க உள்ளது. சிவகார்த்திகேயன் விவகாரம் உள்ள பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணைமடைய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்ககுவதற்காக தொகை நடிகர் சங்க பணத்தில் இருந்து எடுக்கவில்லை. நடிகர் சங்கத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களுக்கு ஊழல் செய்யும் ஆசையோ, எண்ணமோ கிடையாது. அது வரவும் வராது. சரத்குமார் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கைக்கான செயல்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் நானே நினைத்தாலும் என்னால் தனிச்சையாக நடக்க முடியாது. யாராக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்னைக்கு தனிப்பட்ட முறையில் வழக்கு தொட வேண்டும். அனைத்தும் விதிகளின்படியே நடைபெற்று வருகிறது. விதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோர். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு. அது யார் யார் என்பது உங்களுக்கு நடக்கும் போது தெரியும் என்றார்.
நாசர் : விழாவில் தலைவர் நாசர் பேசுகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் இடையே பிரச்னை ஏற்படின் நட்புரீதியில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றார்.
பொன்வண்ணன் : விழாவில் பேசிய துணைத்தலைவர் பொன்வண்ணன், நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வசூலான ரூ.13 கோடியை வைத்து கட்டடம் கட்ட முதற்கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்படும். 60 முதல் 70 வயதிலான மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்றார்.