'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

மதுரை மாநகரின் அடையாளங்களில் மிக முக்கியமானது தியேட்டர்கள். 20-30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை மக்கள் தியேட்டரை கோவிலாகத்தான் பார்த்தார்கள், இம்பீரியல், சிட்டி சினிமா, சந்திரா டாக்கீஸ், தினமணி, ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர்களில் ஒன்றான தங்கம், தேவி, தீபா,ரூபா என பழம்பெரும் தியேட்டர்களை கொண்டிருந்தது மதுரை. மதுரையில் உள்ள பல தியேட்டர்கள் இப்போது இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி விட்டது. அந்த வரிசையில் புகழ்பெற்ற சிந்தாமணி தியேட்டரும் இணைந்து விட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பே திரையிடலை நிறுத்திக் கொண்ட இந்த தியேட்டர் ஒரு ஜவுளிக்கடையின் குடோனாக செயல்பட்டு வந்தது. இப்போது தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த சிந்தாமணி தியேட்டருக்கு மற்ற எந்த தியேட்டருக்கும் இல்லாத சிறப்பு உண்டு.
மதுரை தெற்குமாசி வீதியில் 1921ம் ஆண்டு சிட்டி சினிமா தியேட்டர் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் மவுன படங்கள் திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசும் படங்கள் திரையிடப்பட்டது. வெளிநாட்டிலிருந்து சினிமா புரொஜக்டர்கள் வரவழைத்த முதல் தியேட்டர் இது. இந்த தியேட்டரில்தான் தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் 3 தீபாவளிகளை கடந்து 770 நாட்கள் ஓடியது.
அதன் பின்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படம் ஒரு வருடத்தை தாண்டி ஓடியது. சிந்தாமணி படத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு 1936ம் ஆண்டு, மதுரை, கீழவெளி வீதியில் கட்டப்பட்ட புதிய தியேட்டருக்கு சிந்தாமணி என்றே பெயர் சூட்டினார்கள். 80 ஆண்டுகளை கடந்த சிந்தாமணி தியேட்டர் இன்று சிதைக்கப்பட்டுவிட்டது. சிந்தாமணி போன்று தமிழகத்தில் இன்னும் பல ஊர்களில் எத்தனையோ தியேட்டர்கள் அதன் அடையாளங்களை இழந்துவிட்டன, இழந்தும் வருகின்றன.