ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுசுடன் பொல்லாதவன் படத்திலேயே நடிக்க வேண்டியவர் காஜல் அகர்வால், அப்போது போட்டோ ஷூட் எல்லாம் நடந்த நிலையில் திடீரென அவர் விலகினார். இதையடுத்து மாரி படத்தில்தான் தனுஷூடன் முதன்முதலாக இணைந்தார் காஜல்அகர்வால். ஆக்சன் கதையில் உருவான அந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. என்றபோதும், அந்த படத்தில் காஜலின் நடிப்பு கவனிக்கும்படியாக இருந்ததால் மாரி-2 படத்திலும் அவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தார் தனுஷ். ஆனால் சில முன்னணி டைரக்டர்களின் படங்களில் கமிட்டாகி விட்டதால் அந்த படங்களை முடித்துக்கொடுத்த பிறகுதான் மாரி-2வில் நடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.
இந்த நிலையில், தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கும் தனுஷ், இந்த படத்தில் ராஞ்ஜனா படத்தில் தன்னுடன் நடித்த இந்தி நடிகை சோனம் கபூரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தார். ஆனால் இப்போது கமர்சியல் கருதி, அவருக்கு பதிலாக காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார். தற்போது ஜீவாவுடன் கவலை வேண்டாம் படத்தில் நடித்து முடித்துள்ள காஜல்அகர்வால், அஜீத்தின் 57வது படத்திலும் நடித்து வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம்.