ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விலங்குகள் நல அமைப்பான, பீட்டாவுக்காக, எமி ஜாக்சன் நடித்த, பிரசார படத்திற்கு, தமிழக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எமி ஜாக்சன், பீட்டாவுக்கு ஆதரவாக, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு பிரசாரம் செய்தார். இது, ஜல்லிக்கட்டை ஆதரிக்கும், தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. அதனால், ரஜினியுடன், எமி நடிக்கும், 2.0 படத்தில் இருந்து, அவரை நீக்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பீட்டாவுக்காக, தான் நடித்த பிரசார படத்தின் முதல் பாகம், விரைவில் வெளியாக உள்ளதாக, எமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, எமிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதலில், நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்; எங்களுக்கு, பீட்டா தேவையில்லை என, அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எமியின் பீட்டா பிரசார படம், ரஜினி படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.