ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகத்தில் 80 மற்றும் 90களில் குடும்பப் பாங்கான படங்களின் மூலம் தாய்க்குலங்களிடம் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் விசு. அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த 90 சதவீதப் படங்கள் தாய்மார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று 100 நாட்களைக் கடந்தும் ஓடி சாதனை புரிந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படங்களைத் தந்து தியேட்டர்கள் பக்கம் பெண்களை தொடர்ந்து வர வைத்ததில் இயக்குனர் விசுவுக்குத்தான் தமிழ்த் திரையுலகம் இன்னமும் நன்றி சொல்ல வேண்டும்.
“மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை,” ஆகிய படங்கள் அவரது இயக்கத்தில் வெளிவந்த குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள். 90களின் மத்தியில் சின்னத் திரைக்கு பெரிய வரவேற்பு வந்த நிலையில் தன்னுடைய பார்வையை சின்னத் திரை பக்கமும் திருப்பினார்.
தனியார் டிவியில் வந்த பேச்சரங்க நிகழ்ச்சியான 'அரட்டை அரங்கம்' நிகழ்ச்சியை பல வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினார். பின்னர் அங்கிருந்து விலகி ஜெயா டிவியில் 'மக்கள் அரங்கம்' என்ற நிகழ்ச்சியை சில வருடங்கள் நடத்தினார். உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததை அடுத்து டிவி நிகழ்ச்சிகளை விட்டு கடந்த சில வருடங்களாக விலகியிருந்தார். இப்போது 'விசுமா' என்ற வெப் டிவி ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளார்.
அவருடைய பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயராக இருக்கும் 'உமா' என்ற அவரது மனைவி பெயரையும் தன் பெயருடன் இணைத்து 'Visuma', தமிழில 'விசுமா' என்ற பெயரை தன்னுடைய வெப்டிவிக்காக வைத்துள்ளார். இணையதளம் வழியாக வர உள்ள இந்த டிவியில் பல நிகழ்ச்சிகள் வர உள்ளது. விரைவில் இந்த இணையதள டிவி ஔிப்பரப்பாக உள்ளது.