'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ்-நந்திதா அறிமுகமான படம் அட்டகத்தி. அந்த படம் பெரிய வெற்றியை அடைந்ததை அடுத்து அவர்கள் இருவருமே பிசியாகி விட்டனர். ஆனால் பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் உள்குத்து படத்தில் அவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். அதனால் இந்த படமும் முதல் படத்தைப்போலவே வெற்றி பெற்று தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கிறார் நந்திதா.
அவர் கூறுகையில், இந்த படத்தில் தினேஷின் நடிப்பு வியப்பாக இருந்தது. முதல் படத்தில் நடித்தபோது நிறைய டேக் வாங்குவார். ஆனால் இந்த படத்தில் அப்படியல்ல. பெரிய சீன்களில்கூட சிங்கிள் டேக்கில் நடித்தார். நான்தான் சில சமயங்களில் டேக் வாங்கினேன். அதோடு, இப்போது அவர் வளர்ந்துவிட்ட ஹீரோ என்றபோதும், அவரிடம் எந்தவித பந்தாவும் இல்லை. முதல் படத்தில் நடித்தபோது என்னிடம் எப்படி பேசிப்பழகினாரோ அதேபோல் இப்போதும் மாறாமல் இருந்தார். அதோடு, அவர் ஸ்பாட்டில் இருந்தால் போராடிக்காது. ஏதாவது காமெடியாக பேசிக்கொண்டேயிருப்பார். அந்த வகையில், தினேஷ் இப்போது எனக்கு நல்ல நண்பராகி விட்டார் என்கிறார் நந்திதா.