ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்தவரான ஜாக்கி சான், தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின்னர் தனது அதிரடி நடிப்பால் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆப் டிராகன், ஹூ ஆம் ஐ, ரஷ் ஹவர், தி கராத்தே கிட் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஜாக்கி சான். ஆக்ஷ்ன் காட்சிகளுடன் காமெடியும் சேர்ந்து செய்வது ஜாக்கி சான் படங்களின் சிறப்பான ஒரு விஷயமாகும். நடிகராக மட்டுமல்லாது 30 படங்களை இயக்கியும் உள்ளார் ஜாக்கிசான்.
நடிகர், இயக்குநர், சண்டை அமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என பல்வேறு திறமைகளை உடைய ஜாக்கி சானுக்கு தற்போது 62 வயதாகிறது. இதுவரை அவர் ஒரு ஆஸ்கர் விருது கூட வாங்கியது இல்லை. இந்நிலையில் சினிமாவில் ஜாக்கி சானின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ‛தி அகடாமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த விருது வருகிற நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வழங்கப்பட இருக்கிறது.