ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ரஜினி முருகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள படம் 'ரெமோ'. இந்தப் படத்தில் முதலில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி ராசியில் கீர்த்தி சுரேஷை மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். படத்தில் 'நர்ஸ்' வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனை விட தான் அழகில் குறைந்தவராகவே இருக்கிறேன் என கீர்த்தி சுரேஷே குறைபட்டுக் கொண்டார். படத்தில் இருவருக்குமான 'கெமிஸ்ட்ரி' இந்தப் படத்திலும் நன்றாக இருப்பதாகவே படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த ஒரு மாத காலமாகவே படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. படத்தில் உள்ள 'நர்ஸ்' கதாபாத்திரத்திற்கும் சிவகார்த்திகேயனே குரலை மாற்றி பெண் குரலில் பேசியுள்ளார். இந்தப் படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணியை முடித்துவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று இரவுடன் அவருடைய டப்பிங்கை அவர் முடித்துவிட்டார். படத்தில் டாக்டர் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். அவருடைய மனதில் இடம் பிடிக்கத்தான் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடம் அணிந்து அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் செல்வதாக கதை அமைந்துள்ளது என்கிறார்கள்.