ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபகாலமாக நயன்தாரா நடித்தாலே அந்த படம் வெற்றி என்றாகி விட்டது. இதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் ஹீரோக்கள் நயன்தாராவை தங்கள் படங்களில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஈ படத்திற்கு பிறகு திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடித்த ஜீவாவுக்கு அந்த படம் ஹிட்டாக அமைந்தது.
அதையடுத்து இப்போது ஆர்யாவும் அமீர் இயக்கத்தில் தான் நடிக்கும் சந்தன தேவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்யாவுடன் நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றியாக அமைந்தது. ஆனால் ராஜா ராணிக்கு பிறகு ஆர்யா நடித்த எந்த படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அமீர் இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து தன்னை தொடர்ந்து வரும் தோல்வியை விரட்டியடிக்க முடிவு செய்திருக்கிறாராம் ஆர்யா.